தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பொன்மான்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதனை தொடர்ந்து மெலட்டூர் அருகே கருப்பூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினருக்கும் வசித்து வருகின்றனர். இந்த ஊர்களுக்கு இடையேச் செல்லும் சாலையின் குறுக்கே விக்கிரவாண்டி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைகின்றது. இதனால் இரு கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் கீழ் பாலம் அமைக்க வேண்டும் எனக் கூறி தேசிய நெடுஞ் சாலையில் சாமிநாதன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் 50 பேருக்கும் மேல் பங்கேற்றனர். சாலை மறியல் குறித்த தகவல் அறிந்த பாபநாசம் காவல் ஆய்வாளர் பொறுப்பு வனிதா உள்ளிட்ட போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கை விடச் செய்தனர்.