பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் ,இன்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமரை வரவேற்க எடப்பாடி வரவில்லை என்பதால் எங்களுக்கு கவலை இல்லை. பிரதமர் மோடியை யாருக்கெல்லாம் பிடிக்குமோ, அவர்கள் எல்லாம் பிரதமர் மோடியை வரலவேற்க வந்தால் போதும், நீங்க வாங்க, நீங்க வாங்க என யாரையும் அழைக்கப்போவதில்லை. பெரிய கட்சி, சின்னகட்சி என்று இல்லை. பிரதமர் மோடியை பயன்படுத்தி அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் வரவேண்டியதில்லை. பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். பிரதமர் வருகைக்கும் , வௌ்ள நிவாரண நிதிக்கும் சம்பந்தம் இல்லை. வரவேண்டிய நிதி நிச்சயம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.