தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் பாதுகாப்பு வாகனங்களின் நிறங்கள் மாற்றப்பட்டுள்ளன. வழக்கமாக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் வெள்ளை நிற டயோட்டா இனோவாகவே இருந்து வந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக முதல்வர் செல்லும் போது பாதுகாப்பிற்காக செல்லும் அனைத்து வாகனங்களும் கறுப்பு நிறத்திலான இனோவாக்களாக இருந்தன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு கூடுதல் வசதிகள் உடன் கூடிய புதிய பாதுகாப்பு வாகனங்களுடன் இன்று முதல்வர் முதல்வர் ஸ்டாலின் பயணிக்கத் தொடங்கியுள்ளார். மற்ற மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு வாகனங்களை போலவே, தமிழகத்திலும் தற்போது கருப்பு நிறத்தில் பாதுகாப்பு வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளனஎன்கின்றனர்.. .