Skip to content
Home » 1 நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் …. வார்னர்

1 நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் …. வார்னர்

  • by Authour

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (வயது 37). இவர் 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 932 ரன்கள் குவித்துள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 695 ரன்கள் குவித்து இருக்கிறார். மேலும், 99 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 894 ரன்கள் அடித்துள்ளார். இதனிடையே, ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் நாளை மறுதினம் (3ம் தேதி) சிட்னி மைதானத்தில் தொடங்க உள்ளது. இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் அறிவித்துள்ளார். அதேவேளை, 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அழைப்பு இருந்தால் அதில் விளையாட தயார் எனவும் வார்னர் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியா அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *