குடந்தை ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பாபநாசத்தில்நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… தமிழ் நாடு என்ற சொல் சிலர் நினைப்பதுப் போன்று சாதரண சொல் அல்ல. அதில் போர் குணமிக்க பொருள் பொதிந்த சொல் மறைந்துள்ளது. தமிழ் நாடு என்ற சொல்லின் முதல் எழுத்தான த என்ற எழுத்தையும்,கடைசி டு என்ற எழுத்தையும் இணைத்தால் தடு என்ற சொல்பிறக்கும். இதன் பொருள் யாதெனில்,
ஆளுநர் இரவியின் சூழ்ச்சிகளைத் தடு, அவர் மூலம் வரும் தீமைகளைத் தடு என்பது பொருளாகும்.
நன்மையை ஏவி தீமையை தடுங்கள் என்பது நபிகள் நாயகத்தின் போதனை. சங்க இலக்கியங்கள் மற்றும் பெரியபுராணம் உள்ளிட்ட சமய இலக்கியங்களிலும் தமிழ்நாடு என்ற சொல் அமைந்துள்ளது என்றார்.