திருச்சியை அடுத்த பொன்மலையை பகுதியில் உள்ள விவேகானந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (35). இவர் கோவையில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். புத்தாண்டிற்காக இன்று காலை திருச்சி வந்த முத்துபாண்டி பொன்மலை சந்தையில் தனது நண்பர் ஒருவரின் மீன்கடையில் அவருடன் சேர்ந்து வியாபாரம் பார்த்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தி நிலையில் முத்துப்பாண்டியை அடையாளம் தெரியாத நபர்கள் மாஜிராணுவக்காலனியை அடுத்துள்ள நாகம்மா கோவில் அருகே கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு ஓடி விட்டனர். பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் காட்சிகளின் அடிப்படையில கொலையாளியை தேடி வருகின்றனர்