கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லையில் நடிகர் விஜய் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து விமானம்
மூலம் சென்னை வந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் உதவி செய்தாலும் மகிழ்ச்சிதான்” என்று கனிமொழி பதிலளித்தார். மேலும் பேசிய அவர் “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதிப்புகள் பெரிய அளவில் இருப்பதால் முதலமைச்சர் என்னென்ன நிவாரணங்கள் தரப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.