பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கின் ஆனந்தராஜ் (41) என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கானது பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவ்வழக்கின் குற்றவாளியான ஆனந்தராஜ் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50000/- அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தண்டனை என தீர்ப்பளித்து மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.