Skip to content
Home » நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்….12ம் தேதி ஓட்டெடுப்பு

நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்….12ம் தேதி ஓட்டெடுப்பு

  • by Authour

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன்,  திமுகவை சேர்ந்தவர்.  இந்த  மாநகராட்சியில்  55 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றது. ஒருவர் சுயேச்சை, 4 பேர் அதிமுக.  இந்த நிலையில் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள்  சரவணனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இது குறித்து பல சமரச பேச்சுக்கள் நடந்தது. ஆனாலும் கவுன்சிலர்கள் அதனை ஏற்கவில்லை.

இந்த நிலையில் வரும் ஜனவரி  12ம் தேதி காலை 11 மணிக்கு  மாநகராட்சி கூட்டம் நடக்கிறது. இதில் மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி சரவணன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டால், உடனடியாக புதிய மேயர் தேர்வும் நடைபெறும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *