பெரம்பலூர் மாவட்டம் குன்ன வட்டம் கீழப்புலியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுகுடல் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர். உண்டியலில் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.