கரூர் மாவட்ட அனைத்து டிஜிட்டல் வீடியோ மற்றும் டிஜிட்டல் போட்டோகிராபர் உறுப்பினர்கள் சங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு, உறுப்பினர் உரிமத்தை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை, 2024ஆம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் புதுப்பித்தல், 2024ஆம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரி வழங்குதல், சங்கத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான நல்ல திட்டங்களை செயல்படுத்துதல், பெரும்பாலான
உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் சங்க உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், சமீபத்தில் மறைந்த சங்க உறுப்பினர்களின் மூன்று பேரது குடும்பத்தினருக்கு சுமார் 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் தொழில்நுட்ப கண்காட்சியும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலா, மாவட்ட பொருளாளர் பிரசாத் விஸ்வநாதன், மாவட்ட துணை தலைவர் வினோத்குமார், மாவட்ட இணை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.