தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து கமல் கூறியதாவது:நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன் விஜயகாந்த் எப்படி என்னிடம் பழகினாரோ, நட்சத்திர அந்தஸ்து வந்த பிறகும் அதே அன்புடன் என்னிடம் பழகினார். பணிவும், நியாயமான கோபமும கொண்டவர் விஜயகாந்த். எளிமை , நட்பு, பெருந்தன்மை, கொண்டவர். இப்படிப்பட்ட நேர்மையானவரை இழந்திருப்பது என்னைப்போன்றவர்களுக்கு தனிமை தான். இவ்வாறு கமல் கூறினார்.