அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சந்திரகாசன் 2018 ம் ஆண்டு செந்துறை வட்டாட்சியரிடம் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார் இதற்கான கட்டணமும் செலுத்திய நிலையில் இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து சந்திரகாசன் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் கடந்த 2019 ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தனது தீர்ப்பில் சந்திரகாசன் மனு மீது நான்கு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 2018 ம் ஆண்டு முதல் வழக்கு தாக்கல் செய்த நாள் வரை செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய வட்டாட்சியர்கள் ரூபாய் 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்