2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை. மேலும், அந்த உரையில் இல்லாத வார்த்தைகளையும் கவர்னர் பயன்படுத்தினார். முதல் அமைச்சர் ஸ்டாலின் உரை வாசித்தபோது கவர்னர் பாதியிலேயே வெளியேறி சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னரின் இந்தகைய செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சட்டமன்றத்தை அவமதித்த கவர்னர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என தமிழக மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்புகிறார்கள்.
மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என பயந்து எடப்பாடியும், ஓபிஎஸ்சும் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் மக்கள் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளனர். இந்த நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.