தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலமானார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில் அவரது இழப்பு தமிழ்நாட்டுக்கும், தேமுதிக தொண்டர்களு்ககும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்து உள்ளார். நேரில் அஞ்சலி செலுத்தவும் இருக்கிறார்.
இதுபோல புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை விடுத்துள்ள இரங்கல் செய்தியில் எனது சகோதரனை இழந்து விட்டேன் என தெரிவிதூது உள்ளார்.
இதுபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், திருமாவளவன், சரத்குமார், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், பாஜக தலைவர் அண்ணாமலை., நடிகர் விகரம், என அனைத்து கட்சி தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என அனைத்து திரைலயுலகமும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளது.