தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்துக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மார்பு சளி அதிகமாக இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5. 30 மணி அளவில் விஜயகாந்த் உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த தொண்டர்கள் மருத்துவமனை முன் திரண்டனர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறியதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் விஜயகாந்த் வீடு, தேமுதிக தலைமையகம், மியாட் மருத்துவமனை ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்படப்டடுள்ளது.
தேமுதிக நிர்வாகிகள் மேற்கண்ட 3 இடங்களிலும் திரண்டு கண்ணீர் விட்டு அழுவதை பார்க்க முடிந்தது. எனவேஉடல் நிலை பின்னடைவாக உள்ளதாகவே தெரிகிறது. விஜயகாந்த்துக்கு ஏற்கனவே 2020ல் ஒரு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நலம் குறித்து கவலையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திடீரென 8.45 மணிக்கு விஜயகாந்த் இறந்து விட்டதாக தகவல் வெளியானது.
உடனடியாக அவரது உடல் இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது. இந்த தகவலால் தொண்டர்கள் கதறி அழுதனர்.