பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார் . துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து சேலம் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலை. துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது