திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபால் (27) இவரது மனைவி நேயா (24).சம்பவத்தன்று இவரை உறையூர் ராமலிங்க நகர் 5வது கிராஸில் உள்ள மாமனார் பாலசுப்பிரமணியன் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பிறகு வீட்டுக்கு சென்று பார்த்தபோது மாமனார் பாலசுப்பிரமணியனின் வீடு பூட்டப்பட்டு இருந்தது, மேலும் வீட்டில் இருந்த மாமியார் சத்யா ( 45)மைத்துனர்கள் கீர்த்திவாசன், கீர்த்திநாதன் ( வயது (18)ஆகிய ஐந்து பேர் வீட்டில் காணவில்லை .
இது குறித்து தனபால் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் தன்னுடைய மனைவி நேயா, மற்றும் மாமனார், மாமியார், மைத்துனர்கள் உள்பட 5 பேர் காணாமல் போய்விட்டனர் என்று புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.