அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும். மதுரையே குலுங்கும் அளவில் மதுரையில் அதிமுக மாநாடு நடத்தினோம். எங்களைப்போல யாரும் சிறப்பாக மாநாடு நடத்த முடியாது. அந்த மாநாட்டை திமுகவினர் விமர்சித்ததால் தான் சேலம் திமுக இளைஞரணி மாநாடு தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை. அவர் அரசியலில் கத்துக்குட்டி. தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்து விட்டதால் இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்.
தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த இயக்கம் அதிமுக. எந்த கட்சியும் 30 ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை. கொரோனா காலத்தில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. கொரோனா காலத்திலும் மக்களை வாழவைத்தோம். பல சோதனைகளை கடந்து சாதனை படைத்த கட்சி அதிமுக.
சட்டமன்ற தேர்தலின்போது, 530 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அதை நிறைவேற்றினாரா, ஒரு பொம்மை முதல்வர் ஆட்சி செய்கிறார். இந்த ஆட்சியில் சாதனை என்றால் ஊழல் தான். வேறு என்ன சாதனை செய்திருக்கிறார்கள். ஊழல் இல்லாத துறையே இல்லை. ஸ்டாலின் எப்போதும் நம்மை பார்த்து குறை சொல்வார். நம்முடைய ஆட்சி ஊழல் என்பார். இப்போது ஒரு அமைச்சருக்கு ஊழல் தண்டனை கிடைத்து உள்ளது. இன்னும் பலருக்கு சிறை தண்டனை கிடைக்கும். சட்டமன்றத்தில் முன்வரிசையில் இருப்பவர்கள் பலர் சிறைக்கு செல்வார்கள்.நாடாளுமன்ற தேர்தலுக்குள் பலர் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருப்பார்கள். ஸ்டாலினுக்கு கட்சியும் நடத்த தெரியல. ஆட்சியும் நடத்த தெரியல.
மீண்டும் அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் வந்து விட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும். போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதில் வெற்றி பெறுவோம்.
3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர் கருகியது. அதற்கு நிவாரணம் குறைவாக வழங்கப்பட்டது. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தனர். எனவே விவசாயிகள் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள். தற்போதைய மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தூத்துக்குடியில் இன்று வரை பல இடங்களில் தண்ணீர் வடியல. கால்நடைகள் செத்து மிதக்கின்றன. தொலைக்காட்சிகளில் செய்திகளை பார்க்கிறோம். நான் 19ம் தேதி போனேன். எல்லா பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது, முதல்வர் டில்லிக்கு போகிறார். ஓட்டுப்போட்ட மக்களபை்பற்றி அவர் கவலைப்படவில்லை. 3வது நாள் தான் அங்கு போகிறார். தென் மாவட்டங்களில் கனமழை என 17ம் தேதியே வானிலை மையம் அறிவித்தது. மக்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டாமா? தாமிரபரணியில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றது. இதனால் பல உயிர்களை இழந்திருக்கிறோம். திருநெல்வேலியில் 16 பேர் இறந்திருக்கிறார்கள். முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இவர்களை காப்பாற்றி இருக்கலாம்.
அரசு முன்னேற்பாடு செய்யாததால் மக்கள் துன்பப்படுகிறார்கள். காயல்பட்டினம், ஏரலில் 110 செ.மீ. மேல் மழை பெய்தது. அவர்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கல. திமுக அரசு எப்போது கேட்டாலும் நிதி இல்ல, நிதி இல்ல என்கிறது. அதிமுக ஆட்சியில் அதிக கடன் வாங்கி விட்டார்கள் என்றார்கள். நிதி ஆதாரம் பெருக்க ஒரு குழு போட்டார் ஸ்டாலின். அந்த குழு போட்ட பிறகும் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் ஆகி உள்ளது. மத்திய அரசு உதவி செய்யும் என எதிர்பார்க்க கூடாது. மத்திய அரசை குறை சொல்லி தப்பிக்க கூடாது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். நிதி வரும் என எதிர்பார்க்காமல், மாநில அரசு நிதியில் இருந்து மக்களுக்கு வழங்கிய ஆட்சி அதிமுக அரசு.
கேட்கிற நிதி எல்லாம், மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு தந்ததா சரித்திரம் இல்ல. காங்கிரசும், பாஜக அரசும் தமிழ்நாட்டுக்கு குறைத்து தான் கொடுத்திருக்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பாஜக ஆண்டாலும் சரி மாற்றான்தாய் மனப்பான்மையுடன் தான் செயல்படுகிறார்கள். மனிதாபிமானத்தோடு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலை. மத்திய அரசு இந்த பேரிடர் காலத்தில் உதவி செய்ய வேண்டும்.
19ம் தேதி நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஒரு பிரச்னை வந்தது. நிதிஷ்குமார் டிஆர் பாலு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க கேட்டார். அதற்கு நிதிஷ் போய் இந்தி படித்து விட்டு வாங்க என்றார். எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என்பீர்களே, அங்கே ஏன் தமிழ், பேசவில்லை. இது தான் திமுகவின் இரட்டை இல்லை. மக்கள் தான் ெஎஜமானர்கள். மக்ளுக்கு தான் ஆட்சி, கட்சி, பிரதமருக்காக கட்சி அல்ல. வாக்காளர்களின் குரல் நாமாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அது தான் எங்கள் எணெ்ணம். யார் பி. பம். என்பது பிரச்னை நல்ல. வாக்களிக்கும் மக்கள் குரலை ஒலிக்க வேண்டும்.
கூட்டணி தர்மம் என்ற நிலை இனி கிடையாது. தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்ைலை. அதிமுக வை பொறுத்தவரை மக்கள் தான் முக்கியம். மக்கள் துணையோடு வெற்றிபெறும் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரைல் கொடுப்பார்கள். அதிமுகவில் 37 எம்.பிக்கள் இருந்தார்கள். காவிரி பிரச்னைக்காக 27 நாள் நாடாளுமன்றத்தை செயல்படுத்த விடாமல் போராடினோம். 27 நாட்கள் சபை ஒத்திவைக்கபட்டது. நீட் தேர்வுக்காக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தெம்பு திமுகவுக்கு உள்ளதா, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்காக முதல் கையெழுத்து என்றார். இப்போது 50 லட்சம் கையெழுத்து வாங்குகிறார்கள். இதை யாரிடம் போய் கொடுப்பார்கள்.
சிறுபான்மை மக்களை பற்றி எதிர்க்கட்சி தலைவருக்கு எப்படி திடீர் பாசம் வந்தது என்கிறார் ஸ்டாலின். அதிமுக, பாஜகவில் இருந்து விலகியதும் முதல்வருக்கு தூக்கம் போச்சு., சிறுபான்மை மக்களின் வாக்கு சிதறி விடும் என்ற பயம் வந்து விட்டது. . பாஜக கூட்டணி இல்லை என்பதை நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம். (கரகோஷம்)
ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு இது. அதன்படி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். விழித்துகொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்கள் என புரட்சி தலைவர் பாடினார். இப்போது சிறுபான்மை மக்கள் விழித்து கொண்டார்கள். இது குழு அரசாங்கம். எதற்கெடுத்தாலும் குழு தான் போடுவார்கள். திமுக ஆட்சியில் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்கள். எதுவும் கிடையாது. 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி கொடுத்தோம்.
இந்தியாவில் தார்சாலை அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு துறைகளில் சாதனை. அதிமுக ஆட்சியில் தேசிய அளவில் பல துறைகளில் தேசிய விருதுகள் பெற்றோம். உள்ளாட்சி துறை, சமூகநலத்துறை, மின்துறை என தேசிய விருது பெற்றோம். உங்களுடைய ஆட்சியில் ஏதாவது சொல்ல முடியுமா?
எப்படி பேச வேண்டும் என்று நாகரீகம் தெரியாமல் உதயநிதி பேசுகிறார். நீ எப்படி வேண்டுமானாலும் பேசிட்டு போய்விடுவாய். அதனால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கதலைமை ெசயலாளர் சென்னையில் 5ம் தேதி இரவு தான் பேட்டி கொடுக்கிறார். நெய்வேலியில் இருந்து மோட்டார்கள் வருகிறது என்று. 3, 4ல் மழை பெய்தது. மறுநாள் டிஆர் பாலு நாடாளுமன்றத்தில் நிதி கொடுங்கள் என பேசுகிறார். நல்ல முறையில் நிதி கேட்டாலே மத்திய அரசு நிதி கொடுக்காது. இந்த அரசில் நிறைய குறைகள் இருக்கு. அதை படித்தால் இன்னும் 1 மணி நேரம் ஆகும். நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள். உதய நிதி ஸ்டாலின் உங்க தாத்தாவுக்கு பேனா வைக்க எங்கிருந்து பணம் வந்தது. கடலில் கொண்டு போய் 83 கோடிக்கு பேனா வைக்கிறீர்கள். மக்கள் துன்பமாக இருக்கிற நேரத்தில் கார் ரேஸ்சுக்கு 42 கோடி ரூபாய் தேவையா அதற்கு சாலை அமைக்கிறார்கள். மக்கள் வரிப்பணம் எப்படி ஊதாரித்தனமாக செலவு செய்யப்படுகிறது.
அரசாங்க பணத்தில் அவர்கள் குடும்பத்துக்கு நினைவு பேனா வைக்க தயாராக இருக்கிறார்கள். நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாதவர் ஸ்டாலின் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் . அற்புதமாக பூத் கமிட்டி அமைத்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி. பூத் கமிட்டி வலிமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும். அஸ்திவாரம் நன்றாக இருந்தால் தான் கட்டிடம் நன்றாக இருக்கும். அடுத்த செயற்குழு, ெ பாதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படுவார்கள். அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.