அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் இன்று நடந்தது. இதில் கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படலாம் என பத்திரிகைகள், ஊடகங்கள் கருத்து தெரிவித்து இருந்தன. ஆனால் அதுபற்றி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. வழக்கம் போல் திமுக அரசை கண்டித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக மதுரையில் நடத்திய மாநாடு மூலம் ரூ.2 கோடியே 25 லட்சத்து20 ஆயிரம் வரவு வந்ததாகவும், ரூ.2 கோடியே 24 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.