பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேல குணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக். இந்நிலையில் அப்துல் ரசாக் அவரது தந்தையான வாகித் (80) என்பவரை தனியாக வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு, மனைவி, குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் சம்பவம் நடந்த இரவு வாகித் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி,பீரோவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை கொள்ளை யடித்துச்சென்றனர்.
இது தொடர்பாக அரும்பாவூர் போலிசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கு சென்ற போலீஸார் விசாரணை செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த முதியவரை கத்தியை காட்டி மிரட்டிய மர்ம கும்பல், பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மேலகுணங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.