பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் உள்ள வெண்பாவூர் பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்ட்டிருந்த கை.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சித்ரா மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த KA 41 D 2739- (BOLERO CITY PICKUP) வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதில் சந்தேகமடைந்து மேற்படி வாகனத்தை சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
மேற்படி வாகனத்தை ஓட்டிவந்த நபரையும் அவருடன் வந்த மற்றொரு நபரையும் விசாரணை செய்ததில் அவர்கள் 1). பிரவீன் (21) த/பெ வெங்கடராமச்சாரி, சொன்னேவிள்ளி, உள்ளாளு அப்நகர் ,பெங்களூர், கர்நாடகா. 2). அஸ்லாமு (30) த/பெ ஹசம்தான் சொன்னேவிள்ளி, உள்ளாளு அப்நகர் ,பெங்களூர், கர்நாடகா. ஆகியோர் என்பதும் பெங்களூரில் இருந்து பெரம்பலூருக்கு குட்கா, பான்மசாலா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மாவட்ட எஸ்பி ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் மங்களமேடு டிஎஸ்பி T.சீராளன் வழிகாட்டுதலின்படியும் மேற்படி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 32.500 Kg எடையுள்ள தலா 21 மூட்டை ஹான்ஸ் (682.5 கிலோ எடை ரூ.6,82,500 மதிப்பு) மற்றும் 24.350 Kg எடையுள்ள தலா 5 மூட்டை விமல் பான் மசாலா (121.75 கிலோ எடை ரூ.1,21,750) என மொத்தம் 804.25 கிலோ எடையுள்ள ரூ.8,04,250 (எட்டு லட்சத்து நான்காயிரத்து இருநூற்றைம்பது ரூபாய்) மதிப்புள்ள போதைப்பொருட்களையும் அவற்றை கடத்த பயன்படுத்திய KA 41 D 2739- (BOLERO CITY PICKUP) வாகனத்தையும் பறிமுதல் செய்த கை.களத்தூர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய சிறையில் அடைத்தனர்.