சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தயாநிதி மாறனின் விமர்சனம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது …திமுக என்பது சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சி. அந்த கட்சியின் தலைவர்கள் உ.பி, பீகார் மாநில மக்கள் பற்றி ஏதேனும் பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியது. நாங்கள் அதை ஏற்க முடியாது. உத்தரப்பிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களின் தேவை நாடு முழுவதும் இருக்கிறது. அப்படியான நிலையில் உ.பி, பீகார் தொழிலாளர்களை விமர்சித்தால் நாங்கள் கண்டனம் தெரிவிப்போம். இத்தகைய கருத்துகளை தெரிவிக்காமல் அனைத்து கட்சித் தலைவர்களும் தவிர்க்க வேண்டும். பீகார் மாநில மக்கள் இதர மாநில மக்களை மதிக்கிறோம். ஆனால் இத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.