பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. இதனை சேடிலைட் சேனல்களும், யூடியூப் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்தன. இதை உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரணக்கானோர் கண்டுகளித்தனர். ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை திருச்சியை தலைமையிடமாகக்கொண்ட 7 யூடியூப் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இதில் இதமிழ் யூடியூப் முதலிடம் பிடித்துள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு துவங்கி 8 மணி வரை என சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை 5 மணி நேரம் 24 நிமிடங்கள் இதமிழ் யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்ததை 12, 300 பேர் கண்டுகளித்துள்ளனர்.