பெரம்பலூர் அருகே மலையாளப்பட்டி கிராமத்தில் 4 நாட்டு துப்பாக்கிகளை எஸ்எஸ்ஐ அகிலாண்டேஸ்வரி தலைமையிலான ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். பச்சிமலை எல்லையில் கவுண்டன்பாளையம், வேட்டுவால்மேடு பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சிலர் வேட்டையாடுவதாக எஸ்எஸ்ஐ அகிலாண்டேஸ்வரிக்கு கிடைத்த தகவலின் பேரில் எஸ்எஸ்ஐ அகிலாண்டேஸ்வரி, குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்எஸ்ஐ சுலோச்சனா, ராகவன் ஜேம்ஸ், காவலர்கள் குமார், கதிரவன் சரவணகுமார் ஆகியோருக்கு கிடைத்த தகவலின்பேரில். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில். ரகசியமாக சென்று விசாரித்தனர். அப்போது, மலையாளப்பட்டி கவுண்டர்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ஜேசிபி ராஜா (43), பூமிதானம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கல்யாண் (41) ஆகியோர் சட்டவிரோதமாக எஸ்பிஎம்எல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். துப்பாக்கிகளுடன் அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு துப்பாக்கி எப்படி தயாரிக்கப்பட்டது? எங்கிருந்து வந்தது? அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.