பெரம்பலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா இன்று துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள துறைமங்கலம் நியாவிலைக்கடையில் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்காக மக்கள் கூடிய நிலையில் சர்வர் பிரச்சினை காரணமாக குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பினை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடைகள் முன் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் சர்வர் பிரச்னை தீர்ந்தது. அதன் பின்னர் மக்கள் பொங்கல் தொகுப்பினை பெற்று சென்றனர்.