அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் நிலைய தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையிலும் ரகசிய தகவலின் அடிப்படையிலும்.. ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் கீழக்குடியிருப்பு பகுதியில் ரோந்து தீவிர சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் புது தெருவை சேர்ந்த கண்ணையன் மகன் கேசவன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பிரிண்ட் செய்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் கேசவனை கைது செய்து அவரிடம் இருந்து, அடுத்த இரண்டு நாட்களுக்கான லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேற்படி கேசவன் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது. ஏற்கனவே கேசவன் மீது ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் லாட்டரி விற்பனை தொடர்பாக 7 வழக்குகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.