Skip to content
Home » இ-தமிழ் நியூஸ் மீது வழக்கு.. மீனாட்சி பெட்ரோல் பங்க் பங்குதாரர் பேட்டி

இ-தமிழ் நியூஸ் மீது வழக்கு.. மீனாட்சி பெட்ரோல் பங்க் பங்குதாரர் பேட்டி

  • by Authour

திருச்சி  டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இயங்கி வந்த மீனாட்சி பெட்ரோல் பங்க் 60 வருடங்களுக்கும் மேலாக  அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவது குறித்தும், அந்த பெட்ரோல் பங்க், விதிகளை மீறி  அந்த இடத்தில் செயல்படுவது குறித்தும்  இ- தமிழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இந்த செய்திக்காக மிரட்டலும், வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என பாச அழைப்புகளும் மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன.

ஆனால்  இ -தழிழ் எதையும் கண்டுகொள்ளாமல்  அரசு நிலத்தில்  செயல்படும் பெட்ரோல்  பங்க் விதிகளை பின்பற்றாமல் இருப்பது குறித்தும்  தொடர்ந்து செய்தி வெளியிட்டது.  இந்த நிலையில்  நேற்று  பெட்ரோல் பங்கை மூட  திருச்சி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி  பங்க் மூடப்பட்டது.

இது குறித்து  மீனாட்சி பெட்ரோல் பங்கு  நிர்வாக பங்குதாரர் நேற்றிரவு ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது..

60 வருடமாக இந்த பெட்ரோல் பங்க் செயல்படுகிறது.  கலெக்டர் ஹரிபாஸ்கர் தான் இந்த இடத்தை  வாடகைக்கு கொடுத்தார். அப்போது காடாக இருந்தது.  அதை இந்தியன் ஆயில் நிறுவனம் தான் சுத்தம் செய்து. அப்போது 3500 காலன்  விற்பதற்கு  லைசென்ஸ்  கொடுக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் பெருக்கத்தின் காரணமாக  60 ஆயிரம் காலன் விற்பனை செய்வதற்கு   லைசென்ஸ் பெற்று நடந்தி வந்தோம். இந்த இடத்தை வாடகைக்கு  ஏற்பாடு செய்தது இந்தியன் ஆயில் நிறுவனம் தான். அவர்கள்  இடத்துக்கான வாடகையை செலுத்துகிறார்கள்.  இதில் மீனாட்சி பெட்ரோல் பங்க் எந்த முறைகேடும், இடத்தை ஆக்கிரமிப்பு   செய்யவில்லை.

2026ம் வருடம் வரைக்கான வாடகை பணம் அட்வான்ஸ்சாக கொடுக்கப்பட்டு  உள்ளது.  இப்போது இந்த பங்க்கில் 60 ஆயிரம் லிட்டர்  எரிபொருள் இருக்கிறது.   எங்களுடைய பொருட்களும் இருக்கிறது. எக்ஸ்ப்ளோசிவ் அனுமதி பெற்றுதான்   எரிபொருளை வெளியே எடுக்க முடியும். . அதற்கு ஒருவாரம் ஆகும். எனவே அதுவரை எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என கலெக்டரிடம்,  நெடுஞ்சாலைத்துறையிடம்  வேண்டுகோள் விடுத்து உள்ளோம்.

60 வருடமாக செயல்படும் இந்த பெட்ரோல் பங்க் இடத்தில் 2 வருடத்திற்கு முன்பு தான் நெடுஞ்சாலைத்துறை தங்கள் இடம் என  சொன்னது. அப்போது  நெடுஞ்சாலைத்துறை  விரிவாக்கத்திற்கு தேவையான 1500 சதுர அடி இடத்தை  கொடுத்தோம்.  இப்போது கூட இடம் தேவை என்றால் எடுத்துக்கொண்டு மீதி இடத்தை கொடுத்தால் அதில் வாடகை செலுத்தி   பங்க் நடத்திக்கொள்வோம்.  இடத்தை காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் கொடுத்ததால், மதுரை ஐகோர்ட்டை நாடினோம்.

நெடுஞ்சாலைத்துறைக்கு  ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம் இல்லை என்பதால் கலெக்டர் முடிவு செய்யும்படி  ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கலெக்டர் இப்போது  இந்த இடத்தை காலி செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதில் அரசியல் தலையீடு இருக்கா என்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை.

இதில் 60 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். வங்கியில் 2, 3 கோடி ரூபாய் கடன் வாங்கி தொழில் செய்து வந்தோம்.   நாங்கள் எந்த முறைகேடும் செய்யாத நிலையில்  இ தமிழ் நியூஸ் சேனல் மட்டும்  நாங்கள் மோசடி செய்ததாக  15 நாளுக்கு ஒரு முறை செய்தி வெளியிட்டது.  இந்த பிரச்னைகள் எல்லாம் முடிந்ததும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *