பெரம்பலூரில் பட்டதாரி – முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 ம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பூலாம்பாடி பிளஸ் மேக்ஸ் குரூப் ஆப் கம்பெனி டத்தோ பிரகதீஸ்குமார் கலந்துகொண்டு, பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100% தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் 100% தேர்ச்சி விழுக்காடு பெற்றுதந்த தலைமையாசிரியர்கள், 2022-2023 கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், முடியாதது ஒன்று மில்லை, முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். மலேசியாவில் அரசு பள்ளியில் பயின்றால் தான் அரசு வேலை என்று உள்ளது. அதுபோல் தமிழகத்திலும் கொண்டு வரலாம்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.