தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நாகலுார் பகுதியை சேர்ந்த அபினேஷ்,21,க்கும், பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதி, அபினேஷ் தென்னை தோப்பு பகுதிக்கு அந்த 17 வயது சிறுமியை அழைத்து சென்றுள்ளார். பிறகு அங்கு வந்த அபினேஷின் நண்பர்கள் ஒன்பத்துவேலி ஸ்ரீகாந்த் (21),. திருவாரூர் மாவட்டம் மாளிகைத்திடல் அரவிந்தன் (21), ஸ்ரீதரன்,24, ஆகிய மூவரும் வந்துள்ளனர்.
பின்னர் அபினேஷின் கொடுத்த யோசனைப்படி, ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த் இருவரும் சிறுமியை பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதனை அரவிந்தன், தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை தனது நண்பர் பூண்டியை சேர்ந்த ராகுல் (எ) குட்டி, (24, மொபைலுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை ராகுல் வேறு சிலருக்கும் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் விபரத்தை சொல்லாமல் மறைத்துள்ளார். இருப்பினும், தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சைல்ட்லைன் 1098-ல் புகார் அளித்தனர். புகாரின் பேரில், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை செய்து, பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து சிறுமி அளித்த தகவலின் பேரில், ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த், அபினேஷ், அரவிந்தன், ராகுல் (எ) குட்டி ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.