திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஏழை-எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர்.
பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவும் வகையில், முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி நிவாரண உதவிகளை செய்தது. முத்துமாலை புரம் பகுதியில் வசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை பாலகன் சரஸ்வதி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மற்றும் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நிறுவனர் பாலகன் ஆறுமுகசாமி வழங்கினார்.
முக்கூடல் வருவாய் அலுவலர்கோமதி மற்றும் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் R.கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் அறக்கட்டளையின் அறங்காவலர் கமலா சௌந்தரபாண்டியன் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் முக்கூடல் ஊர் பெரியவர்கள் மற்றும் கல்லூரியின் பணியாளர்கள் பங்கேற்றனர்.