கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ஒருமுறை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக சார் ஆட்சியரிடம் வழங்கினார்கள். சார் ஆட்சியர் வட்டாட்சியர்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் பொள்ளாச்சியில் புதிதாக
பொறுப்பேற்றுள்ள சார் கலெக்டர் கேத்தீரின் சரண்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு சார் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் வந்திருந்தாலும் சார் ஆட்சியர் தனது செல்போனில் உயர் அதிகாரியிடம் நேரடியாக தொடர்பு கொண்டு விவசாயிகள் அளித்த மனுக்கள் மீதுதான கருத்துக்களை தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பேசியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.