மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்க்கச் சென்ற மீனவர்கள் கடற்கரையில் ஒன்றரை அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட ஒரு இரும்பு பெட்டி கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கியூ பிரிவு போலீசார் அங்கு வந்து பார்த்தனர். அந்த பெட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது. அது சந்தன கலரில் காணப்பட்டது. இது எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த பெட்டியை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதித்தனர். உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று அதனை திறக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.