தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.