புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா
நடந்தது. இந்த நிகழ்வில் தமிழக அளவில் நடந்த சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வெளிநாட்டு பயணமாக ஜப்பான் சென்று திரும்பிய பள்ளி மாணவிகள் லெ.பூர்விகா, க.தீபிகா இருவரையும் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பாராட்டினார்.நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,
முதன்மை கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, ஒன்றிய தி.மு.க.செயலாளர்கேஎஸ்.சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்
சிராஜுனிசா ,சக ஆசிரியர்கள் பங்கேற்றனர்.