சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது வாக்குச்சாவடியில் இருந்த மேஜைகள் உடைக்கப்பட்டது. இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என ஒருதரப்பினர் முறையிட்டனர். அத்துடன் மேஜையை உடைத்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனால் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.