மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஜாமீன் கொடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் கூறியதாவது: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மடிக்கணினியில் இருந்து லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள 75 நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விவரம் சிக்கி உள்ளது”. தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார் . “அங்கித் திவாரியை வாக்கு மூலத்தில் மேலும் சில அதிகாரிக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளார் எனவே தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது” என தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். 2 தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.