திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் படுகளம் வனப்பகுதியில் இன்று காலை சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் வனப்பகுதிக்குள் இருசக்கர வாகனத்தின் அருகே சாய்ந்தவாறு தூக்கில் தொங்கியபடி பிணமாக இருப்பதைப் பார்த்து மணப்பாறை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளார் அந்தத் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து பார்த்து பிணமாக தொங்கியது யார் என்று முதல் கட்ட விசாரணை விசாரணை செய்ததில் இறந்தவர் வைத்திருந்த கைப்பையில் அவருடைய ஆதார் கார்டு மற்றும் உறவினர் தொலைபேசி இருப்பதை கண்டு யார் என்று விசாரித்த போது கரூர் மாவட்டம் கருப்பத்தூர் அருகே உள்ள வேங்காம்பட்டி குடித்துருவை சேர்ந்த அண்ணாவி என்பவரது மகன் பொன்னர் வயது 44 என்பதும் இவர் கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்ததைத் தொடர்ந்து உடனே பிரேத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரப்பூர் படுகளம் வனப்பகுதிக்குள் இருசக்கர வாகனம் அருகே சாய்ந்தவாறு தூக்கில் தொங்கியபடி பிணமாக ஆண் ஒருவரை சடலமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.