தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அளித்த பேட்டி:
பேரவையில் தான் படிக்கும் உரைக்கு ஆளுனர் ரவி ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். 5ம் தேதி அனுப்பிய உரைக்கு 7ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார் கவர்னர். உரையில் தனக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் தெரிவித்திருக்னகலாம். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளியேறினார். இது தவறானது. அதிமுகவினரும் தேசிய கீதம் இசைப்பதற்கு முன் வெளியேறியது அநாகரீகமான செயல். ஆளுநரின் செயலை கண்டிக்காத அதிமுக அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தது போல வெளிநடப்பு செய்துள்ளனர். சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை கவர்னர் தவிர்த்துள்ளார். ஒப்புதல் வழகிய நிலையில் அதை படிக்காதது ஏற்புடையதல்ல. ஒப்புதல் கொடுத்து விட்டு அதை ஏன் படிக்கவில்லை என்பதே கேள்வி.
இவ்வாறு அவர் கூறினார்.