திருச்சி, திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான பாட்டில் மணி (எ) தினேஷ் குமார், வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோரின் கூட்டாளிகள் கஞ்சா விற்பதாக திருச்சி மாவட்டஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி வருண்குமார், உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது, விற்பனைகாக கஞ்சா வைத்திருந்த துவாக்குடி அண்ணா வளைவை சேர்ந்த சந்திரசேகர் மகன் கருவா (எ) ராமசந்திரன் (19),துவாக்குடி நேதாஜி நகரை சேர்ந்த மாசிலாமணி மகன் ஆரோன் நவீன் குமார் (19), காமராஜர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் சத்யா (எ) சக்திவேல்(24) ஆகியோரை கைதுஅவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் அவர்களை திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் துவாக்குடி பகுதியில் விற்பனைகாக கஞ்சா வைத்திருந்த எழில் நகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சரவணக்குமார்(46), ஐயனாஸ் (எ) ரமேஷ் (25), சரவணன் (எ) பரட்டை சரவணன் ஆகியோரை கைது செய்து துவாக்குடி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டது என தெரிய வந்துள்ளது காரணம் ஒடிசாவில் கஞ்சாவின் மிகவும் குறைந்த விலைக்கு கிடைப்பதாகவும் அங்கிருந்து இங்கு கொண்டு வந்து 4 முதல் 5 மடங்கு விலை கூட்டி விற்கப்படுவதாகவும் அதனால் அதிக லாபம் கிடைக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர் கடந்த 5ம் தேதி பாட்டில் மணி (எ) தினேஷ் குமாரை கொலை வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறி கைது செய்து உள்ளனர். மேலும் வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோரை கடந்த 15ம் தேதிசமயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.