Skip to content
Home » போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் ( 52) இவர் நேற்று திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். பிறகு அவரது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரிகள் வாங்கி சோதனை செய்தனர். அப்பொழுது முருகானந்தத்தில் பாஸ்போர்ட்டில் உள்ள தகவல் குறித்து அவரிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.
இதை யடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் முருகானந்தயிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் தன்னுடைய ஆதார்கார்ட்டில் உள்ள தகவல்களை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.  இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரி பவன் குமார் முருகானந்தத்தை திருச்சி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து விமான நிலைய போலீசார் முருகானந்தத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!