தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது… கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது உதவித்தொகையாக அல்ல. உரிமைத்தொகையாக வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியிருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதே போல் மேல்முறையீடும் செய்யலாம் என்றார்.
Tags:கலைஞர் உரிமைத்தொகை