சென்னை எண்ணுர் கடலில் ஆயில் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிடவேண்டும் என்று முடிவு செய்து கமல் இன்று அந்தப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணெய் கழிவு மிதக்கும்
ஆற்றை பார்வையிட்ட தலைவர், பாதிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டு, அங்கு குடியிருப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல் கூறியதாவது…
இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், கழிவுகளை அகற்ற மீனவர்களை பயன்படுத்துவதை கண்டித்து,
சரியான கருவிகளையும் எந்திரங்களையும் பயன்படுத்தி கழிவுகளை அகற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
தலைவர் நம்மவருடன் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், மீனவர் அணி மாநில செயலாளர் R.பிரதீப் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.