தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு இன்று ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக கடையில் பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலான இடங்களில் இன்று கைரேகை வைக்கும் பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வெகுநேரம் கடைகள் முன் வரிசையில் நின்றனர். இதைத்தொடர்ந்து பயோ மெட்ரிக் உதவியின்றி பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.