நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள ஆஃபீஸர்ஸ் கிளப் இறகு பந்தாட்ட கழகச் சார்பில் சிறப்பு இறகு பந்தாட்ட போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் பிலிப் கென்னடி தலைமையில் நடைபெற்ற போட்டியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்
தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் போட்டியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பேட்மிட்டன் விளையாடி அசத்தினர். மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த பேட்மிட்டன் போட்டியில் 40 அணிகள் பங்கேற்றுள்ளனர். போட்டியில் அரசு மற்றும் சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.