மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பூதனூர் செங்கல் சூளையில் சந்திராமூர்த்தி கூலிவேலை செய்து வருகிறார். தனது மகள் தமிழரசி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின்போது உயிரிழந்து விடுகிறார். தமிழரசின் கணவரும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார், இந்நிலையில் பேரக்குழந்தைகளான சதீஷ், தினேஷ்,ஆகிய 2 பேரையும் மிகவும் சிரமப்பட்டு பராமரித்து வருகிறார். வசிப்பதற்கு வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வாழ்ந்து வந்தனர். சென்ற மாதம் பெய்த மழையால் வீடு இல்லாமல் தவித்தனர்.
பூதனூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சதீஷ் ஐந்தாம் வகுப்பும், தினேஷ் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் மூலம் கேள்விப்பட்ட பொறையாரில் உள்ள தொண்டு நிறுவனம் ரூ.3 லட்சத்திற்கு வீடு அமைத்து வயதான மூதாட்டியிடம், வழங்கி உள்ளனர். அந்நிறுவன தலைவர் பிரபு தலைமையாசிரியர் அமுதா ஊராட்சி மன்ற தலைவர் பைலட், பாட்டி சந்திரா மற்றும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.