தஞ்சை மாவட்டம், பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட ரேஷன் கடை கட்டடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி கூத்தரசன், திமுக மாவட்ட துணைச் செயலர் அய்யா ராசு, பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியர் சின்னப் பொண்ணு, செயலர் கலிய மூர்த்தி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அறிவழகன், கலை, இலக்கிய அணி நிர்வாகி முபாரக் ஹுசைன், தொழிலதிபர் வெள்ளம்ஜி அப்துல் ரவூப் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:புதிய ரேசன் கடை