தமிழ்நாடு முதல்வர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு மற்றும் ரூ.1000 ரூபாய் பணம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் புதுக்கோட்டை டவுனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்கள். இந்நிகழ்வில் கவுன்சிலர் ராஜேஸ்வரி,வட்டசெயலாளர் ரெங்கராஜ், தென்றல் சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.