சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கே.கே.நகரில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு இன்று நிவாரணப் பொருட்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். இந்நிகழ்வில்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தென் சென்னை
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, திமுக மாநில மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன் எம்.சி, சென்னை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கனிமொழி தனசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.