திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். முனுசாமி மற்றும் ஜீவா தம்பதியரின் மகன்கள்
சூர்யா(12) மற்றும் விஸ்வா(9) இரண்டு மகன்கள் மின் ஓயரை மிதித்ததில் எதிர்ப்பாராதமாக தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலியே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.